சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்...? - பரபரப்பு தகவல்

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்...? - பரபரப்பு தகவல்
Published on: 

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால், 2023ம் ஆண்டுக்குப்பின் சென்னை கோப்பையை வெல்லவில்லை. அதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்...?

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ்-க்கு பதிலாக மோகித் சர்மா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகித் சர்மாக சென்னை அணிக்காக 4 ஆண்டுகள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com