

சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சென்னை போக்குவரத்துக் காவல்துறையின் ரோந்துப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான 63 இருசக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், காவல்துறையின் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளன.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது சென்னை அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதனும் உடனிருந்தார்.
இந்த நன்கொடை சென்னையின் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.