லியாம் லிவிங்ஸ்டனை டிரேட் முறையில் வாங்க சென்னை அணி ஆர்வம்

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைக்கு அவர் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.
 லியாம் லிவிங்ஸ்டனை டிரேட் முறையில் வாங்க சென்னை அணி ஆர்வம்
Published on: 

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள லிவிங்ஸ்டன், அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கி குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கும் திறன் அவரிடம் இருப்பதால்,சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைக்கு அவர் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.

சிஎஸ்கே முயற்சி

கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்க முடியாததால், லிவிங்ஸ்டனை அணியில் தக்கவைப்பது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அவரைத் தங்கள் அணிக்கு கொண்டு வர சிஎஸ்கே முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிரேட் பேச்சுவார்த்தையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பெயரும் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வீரர்களை பரிமாறிக்கொள்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

லியாம் லிவிங்ஸ்டன் CSK அணிக்கு வந்தால், மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் சுழற்பந்து வீச்சிலும் அணிக்கு உதவ முடியும். இதனால் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், இந்த டிரேட் குறித்த தகவல்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே இருப்பதால், CSK மற்றும் SRH அணிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

X