இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்கமருந்து....? போலி பிட்னஸ் ஊசியை பயன்படுத்தும் வீரர்கள் - ரகசியம் அம்பலம்

ஜீ மீடியாவின் உளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்கமருந்து....? போலி பிட்னஸ் ஊசியை பயன்படுத்தும் வீரர்கள் - ரகசியம் அம்பலம்
Published on

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியை தீர்மானிக்கும் இடத்தில் 5 நபர்கள் உள்ளனர். அவர்கள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, உறுப்பினர்கள் ஷிவ் சுந்தர் தாஸ், சுரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் ஆவார்கள். 20 ஓவர் உலக கோப்பை தோல்விக்கு பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான குழு கலைக்கபட்டு மீண்டும் அவர் தலைமியிலேயே புதிய குழு ஒன்றை பிசிசிஐ கடந்த ஜனவரியில் அமைத்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா மீது செவ்வாயன்று ஜீ மீடியாவின் உளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது

அதில் இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டது, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட முன்னர் மறைக்கப்பட்ட உண்மைகளை சர்மா வெளிப்படுத்தினார்.

வீரர்கள் போலியான உடற்தகுதிக்கு  ஊசிகளைப் பயன்படுத்துவதாகவும், முக்கிய வீரர்களுக்கு ஊசிமூலம் ஏற்படுத்தபட்ட உடற்தகுதியை பிசிசிஐ வேண்டுமென்றே கவனிக்கவில்லை என்றும் சர்மா கூறினார். இந்த வீடியோ இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் வாரியத்தின் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாட்டின் பின்னணியில் உள்ள காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற செல்வாக்கு மிக்க வீரர்கள் தலைமை தேர்வாளரை எவ்வாறு மாற்றுகிறார்கள் மற்றும் முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்க திட்டமிடுவதற்கு இடைவேளைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com