பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன்

ஹாரி புரூக் இரட்டை சதம் அடித்தும் பலன் இல்லை
பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன்
Published on: 

ராவல்பிண்டி,

பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை , இங்கிலாந்து அணிகள் மோதின.

பேட்டிங்குக்கு சொர்க்கப்புரியான இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 429 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் மண்ணில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 202 ரன்கள் (116 பந்து, 21 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார். இரட்டை சதத்துக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப் பட்ட போது, ஹாரி புரூக் சிக்சர், பவுண்டரியுடன் 4-வது பந்தில் அந்த ஸ்கோரை அடைந்தார்.

ஆனால் ஹாரி புரூக் இரட்டை சதம் அடித்தும் பலன் இல்லை. 430 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 24 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்தாலும் அவிஷ்கா பெர்னாண்டோ (97 ரன்), பவன் ரத்னாயகே (130 ரன், 15 பவுண்டரி, 3 சிக்சர்), தசுன் ஷனகா (97 ரன், 6 பவுண்டரி, 8 சிக் சர்), ஜனித் லியானகே (61 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரது சரவெடியான பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 430 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியது.

தோல்வி தொடர்பாக பேசிய இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் கூறியதாவது,

இது உண்மையிலேயே ஒரு சிறப்பான கிரிக்கெட் போட்டி. இரு அணிகளுமே அபாரமாக விளையாடினார்கள் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை அணி எங்களைவிடச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டது.

எங்களுடைய பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. மேலும், எதிரணியின் பலத்திற்கு ஏற்றவாறு விளையாடிவிட்டோம். அதே நேரத்தில், இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி 400 ரன்கள் என்ற இலக்கையும் வெற்றிகரமாகத் துரத்தி சாதனை படைத்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக இத்தகைய சாதனையைப் படைத்திருப்பதாக நீங்கள் கூறினீர்கள். இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை. இலங்கை அணிக்கு எனது பாராட்டுகள்.

ஆம், தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தோல்வியடைந்த அணியில் இருக்கும்போது அந்தச் சாதனைக்கு இப்போது எந்த அர்த்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, அணி தோல்வியடைந்த நிலையில் எனது தனிப்பட்ட ஆட்டத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

ஆம், நாங்கள் சில விஷயங்களை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். எங்கே தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, பந்துவீச்சில் எங்களுடைய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை.இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது.

எனவே, நாங்கள் மீண்டும் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, மன உறுதியுடன் அடுத்த போட்டியில் மீண்டும் களமிறங்க வேண்டும்.என் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com