

2025–26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெர்த் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ .134 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்ததால், மீதமிருந்த நாட்களுக்கான டிக்கெட் வருவாய் பாதிக்கப்பட்டதுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் விளம்பர வருவாயும் குறைந்தது.குறிப்பாக, போட்டிகள் விரைவாக முடிந்ததால் ஒளிபரப்பாளர்களால் திட்டமிட்ட அளவுக்கு விளம்பரங்களை ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், டிக்கெட் கட்டணங்களைத் திருப்பித் தர வேண்டிய சூழலும் உருவானது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு நாட்களிலேயே முடிவடைவது கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு நிதி ரீதியாகப் பெரிய சவாலாக அமையக்கூடும்.