கிரிக்கெட் பயணம் முடிவு... ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்

13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கிரிக்கெட் பயணம் முடிவு... ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் இடது கை பேட்டரான காலின் இங்க்ராம், 22 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடி சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

41 வயதான இங்க்ராம், சமூக வலைதள பதிவு மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதேவேளையில், கிரிக்கெட்டை விட்டு முழுமையாக விலகவில்லை என்றும், இனி பயிற்சியாளர் பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது கிரிக்கெட் ஆட்ட வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது. ஆனால் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகப் போவதில்லை. வீரர்கள் தங்களது திறமையின் உச்சத்தை எட்டுவதற்கும், அவர்களின் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று இங்க்ராம் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com