கால்பந்திற்கு ரொனால்டோ, மெஸ்ஸி போல கிரிக்கெட்டுக்கு விராட் கோலி- இயன் பிஷப்

விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர் என்று இயன் பிஷப் கூறியுள்ளார்.
கால்பந்திற்கு ரொனால்டோ, மெஸ்ஸி போல கிரிக்கெட்டுக்கு விராட் கோலி- இயன் பிஷப்
Published on

மும்பை, 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. தற்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார். இவர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்துள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின்(49) சாதனையை அவர் நெருங்கியுள்ளார். இதுவரை அவர் 48 சதங்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் , இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை புகழ் பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ், கால்பந்து விளையாட்டு வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டினார். இதில் "கூடைப்பந்திற்கு லெப்ரான் ஜேம்ஸ் கால்பந்து விளையாட்டிற்கு ரொனால்டோவும், மெஸ்ஸியும் அது போலவே கிரிக்கெட்டுக்கு விராட் கோலி ஆவார்.கோலிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர், என்று அவர் கூறினார்.

கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியைதான் சமூகவலைத்தளத்தில் அதிகமானோர் பின்தொடருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் மட்டும் சுமார் 261 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்ததற்கு கோலியின் புகழ் ஒரு முக்கிய காரணம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரும் 5-ம் தேதி விராட் கோலி தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com