ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
Published on

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சர்ப்ராஸ் கான், டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜாமி ஓவர்டான், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி.

மும்பை: குயின்டான் டி காக், நமன் திர், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), திலக் வர்மா, ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னெர், ஜஸ்பிரித் பும்ரா, கிரிஷ் பகத், கசன்பார், அஸ்வனி குமார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com