இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கெய்க்வாட்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இந்திய அணிக்காக 23 டி20 போட்டிகளிலும், 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரளவு அசத்தி வரும் அவர் நிலையான வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்.

ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.

தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் அங்கு நடைபெற்ற இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக அவர் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார்.

இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com