மும்பைக்கு எதிராக சி.எஸ்.கே. வெற்றி பெறுவது கடினம்...ஏன் தெரியுமா..? - சுரேஷ் ரெய்னா அதிரடி கருத்து

Image Courtesy:@IPL / @ChennaiIPL / @mipaltan
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விடுமுறை தினமான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே.-வை விட மும்பை அணியின் கையே ஓங்கி இருக்கும் எனவும், சி.எஸ்.கே. வெற்றி பெறுவது கடினம் எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு நல்ல போட்டியை வென்றிருந்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக டிரெண்ட் பவுல்ட் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. அவர் நல்ல லைனில் பந்து வீசுகிறார்.
மேலும், நல்ல யார்க்கர்களையும் வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா வேறு மாதிரியான பார்மில் அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார். எனவே, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கைதான் ஓங்கி இருக்கும். ஏனெனில், மும்பை அணியிடம் அதிக அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
மேலும், சென்னை அணி பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கிறார்கள், நிறைய டாட் பால்களை ஆடுகிறார்கள். நாம் குறைவான டாட் பால்களை ஆட வேண்டும் என்ற மனநிலைக்கு சி.எஸ்.கே வர வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும். முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






