தோனியை விடுவித்த சிஎஸ்கே... சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 19 வீரர்கள் தக்கவைப்பு - முழு பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
Published on: 

சென்னை,

ஐபிஎல் 2027 தொடருக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள் பட்டியல்

2027 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தம் 19 வீரர்களை தக்கவைத்துள்ளது.

1. அகீல் ஹொசைன்

2. அன்ஷுல் கம்போஜ்

3. ஆயுஷ் மாத்ரே

4. டெவால்ட் பிரேவிஸ்

5. குர்ஜப்நீத் சிங்

6. ஜாக் எட்வர்ட்ஸ் (டிரேடு)

7. ஜேமி ஓவர்டன்

8. கார்த்திக் சர்மா

9. லியாம் லிவிங்ஸ்டன் (டிரேடு)

10. முகேஷ் சௌத்ரி

11. நூர் அகமது

12. ராகுல் சாஹர்

13. ராமகிருஷ்ணா கோஷ்

14. ருதுராஜ் கெய்க்வாட்

15. சஞ்சு சாம்சன்

16. சர்பராஸ் கான்

17. சிவம் துபே

18. ஷ்ரேயஸ் கோபால்

19. உர்வில் படேல்

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் பட்டியல்

மறுபுறம், அடுத்த சீசனுக்கான அணியை மறுசீரமைக்கும் வகையில் 11 வீரர்களை விடுவித்துள்ளது.

1. எம்.எஸ். தோனி

2. அமன் கான்

3. டியான் ஃபாரெஸ்டர்

4. குல்தீப் யாதவ்

5. மேக்னெயில் நொரோன்ஹா

6. மாட் ஹென்றி

7. மேத்யூ ஷார்ட்

8. ஆகாஷ் மத்வால்

9. பிரசாந்த் வீர்

10. ஸ்பென்சர் ஜான்சன்

11. சாக் பௌல்க்ஸ்

எம்.எஸ். தோனி ஓய்வு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய உணர்ச்சிகரமான அறிவிப்பாக அமைந்துள்ளது எம்.எஸ். தோனியின் பெயர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது.

ஐபிஎல் தொடரில் தனது வீரர் பயணத்தை முடித்துள்ள தோனி, இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Mentor) செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றிய தோனியின் புதிய பொறுப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரேடு மூலம் சிஎஸ்கே அணிக்கு வந்த வீரர்கள்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் வீரர்கள் பரிமாற்றத்தையும் சிஎஸ்கே மேற்கொண்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டன் - ரூ.6 கோடி

ஜாக் எட்வர்ட்ஸ் - ரூ.3 கோடி

இவர்கள் ஐதராபாத் அணியிலிருந்து சென்னை அணிக்கு வந்துள்ளனர்.

இதற்கு மாற்றாக கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்குச் சென்றுள்ளனர்.

ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே வசம் எவ்வளவு தொகை?

மீதமுள்ள ஏலத் தொகை

ரூ.28.05 கோடி

காலியாக உள்ள இடங்கள்

6

வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்

2

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

19

புதிய அணியுடன் களமிறங்கும் சிஎஸ்கே

தோனியின் வீரர் பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் புதிய அணிக் கட்டமைப்புடன் சிஎஸ்கே 2027 சீசனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

சஞ்சு சாம்சன், சிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள ரூ.28.05 கோடியுடன் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் சிஎஸ்கே எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகிறது என்பதே ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

X