இந்திய ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்ப்பு

இந்திய ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்ப்பு
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பையில் நடக்கிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட், பிக்பாஷ் கிரிக்கெட்டில் ஆடிய போது விலாபகுதியில் காயமடைந்தார். இந்த காயம் குணமடைய 4 வாரம் ஆகும். இதனால் இந்திய தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அதிரடி ஆல்-ரவுண்டர் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com