ஐதராபாத் அணியில் டேவிட் பெய்ன் சேர்ப்பு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெய்ன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத் அணியில் டேவிட் பெய்ன் சேர்ப்பு
Published on

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஒதுங்கிய ஆஸ்திரே லிய ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்சுக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெய்ன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ரூ.1.5 கோடி ஊதியத் துக்கு ஐதராபாத் அணியில் இணைகிறார். இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் டேவிட் பெய்ன் 233 டி20 போட்டியில் (உள்ளூர் மற்றும் லீக் ஆட்டம்) ஆடி 304 விக்கெட்டு கள் வீழ்த்தி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com