காயம் காரணமாக விலகிய டேவிட் வில்லி...முன்னாள் சிஎஸ்கே ஆல் ரவுண்டரை அணியில் சேர்த்த ஆர்சிபி...!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆர்சிபி வீரர் டேவிட் வில்லி விலகி உள்ளார்.
காயம் காரணமாக விலகிய டேவிட் வில்லி...முன்னாள் சிஎஸ்கே ஆல் ரவுண்டரை அணியில் சேர்த்த ஆர்சிபி...!
Published on

பெங்களூரு,

16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன.

மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடரை தொடங்கிய பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவை அந்த அணி சேத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com