உணவகம் ஒன்றை துவங்கியுள்ள பாகிஸ்தான் நடுவர் அலீம் தாருக்கு விராட் கோலி வாழ்த்து

பாகிஸ்தானில் புதிதாக உணவகம் திறந்துள்ள பிரபல நடுவர் அலீம் தாருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உணவகம் ஒன்றை துவங்கியுள்ள பாகிஸ்தான் நடுவர் அலீம் தாருக்கு விராட் கோலி வாழ்த்து
Published on

செஞ்சூரியன்,

ஐசிசி நடுவர்களில் மிகவும் பிரபலமான ஒருசில நடுவர்களில் அலீம் தாரும் ஒருவர். பாகிஸ்தானைச்சேர்ந்த அலீம் தார், தனது சொந்த ஊரான லாகூரில் உணவு விடுதி ஒன்றை துவங்கியுள்ளார். இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டகிராம் வழியாக அலீம் தாருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விராட் கோலி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,

அலீம் அவர்களே, சமீபத்தில் நீங்கள் ஓர் உணவகத்தைத் திறந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நடுவராக நீங்கள் வெற்றிகரமாக உள்ளதுபோல உங்கள் உணவகமும் வெற்றியடையவேண்டும் என விரும்புகிறேன். இந்த உணவகம் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு காது கேளாதோருக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். உங்கள் எண்ணப்படி எல்லாம் நிறைவேறும். அனைவரும் அவருடைய உணவகத்துக்குச் சென்று உணவு அருந்தவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com