இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன ?

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.


இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன ?
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்டனர் கூறியதாவது,

நல்ல போட்டியாக இருந்தது . நாங்கள் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடினோம். பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும்,ஆட்டத் தோல்வியை சிறிது மாற்றக்கூடிய தருணங்கள் இருந்தன இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடியது.

எளிதாக 170 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் இறுதியில், இங்கிலாந்து நன்றாக பந்துவீசியது. 170, 175 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com