இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
 இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?
Published on

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில், பரிசளிப்பு விழாவில் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எங்கள் ஸ்பின்னர்கள் இன்று எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை.

சில தருணங்களில் திட்டத்தை செயல்படுத்துவதில் முடியவில்லை. கடந்த ஆறு மாதங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதால், நாங்கள் அவர்கள்மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். பேட்டிங்கில் பவர் ப்ளே ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முதல் இன்னிங்சை விட இரண்டவது இன்னிங்சில் பிட்ச் கடினமானதாக மாறிவிட்டது.

Also Read
'பாகிஸ்தான் விரும்பினால்...’ - அபிஷேக் சர்மா குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் சூர்ய குமார் பதில்
 இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

இப்படிப்பட்ட போட்டிகளில் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். அதை சமாளிக்க வேண்டும். இதுபோன்ற பல போட்டிகளில் நாம் விளையாடியுள்ளோம். இன்னும் இரண்டு நாளில் அடுத்த போட்டி உள்ளது; அதைப் பற்றியே இப்போது கவனம் செலுத்த வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். சூப்பர் 8 க்கு சென்றால் அது ஒரு புதிய தொடர் போல இருக்கும்.” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com