கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி: கில் கூறியது என்ன ?

வெஸ்ட் இண்டீஸ் 352 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி: கில் கூறியது என்ன ?
Published on: 

நியூசண்டிகார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 352 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 21-வது சதம் அடித்த ஷாய் ஹோப் 162 ரன்னுடனும் (143 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), குட கோஷ் மோட்டி 19 ரன்னுடனும் களத்தில் இருந்தார். முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தோல்வி தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் கில் கூறியதாவது,

நிறைய விஷயங்கள் நன்றாக நடந்துள்ளன. ஆனால் இன்னும் சில பகுதிகளில் நிச்சயமாக நுணுக்கமாக மேம்படுத்த வேண்டியுள்ளது. மொத்த ஸ்கோர் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் பனிப்பொழிவு இருந்த நிலையில் நாங்கள் 4 ஓவர்கள் பின்தங்கியதும், கடைசி நேரத்தில் அவர்கள் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துக்கொண்டார்கள்.

ஓரளவுக்கு திருப்தியாக இருக்கிறேன் என்று சொல்வேன். ஆனால் நான் சொன்னது போல, இன்னும் சில பகுதிகளில் மேம்பாடு தேவை. எங்களுடைய பீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்தத் தொடரில் மட்டும் சுமார் 6 அல்லது 7 கேட்ச்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். உலகக் கோப்பைக்கு முன்னதாக இது நல்ல அறிகுறி அல்ல. எங்களுடைய பீல்டிங் மிகச் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும்.என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com