ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் மிகக்குறைவான ரன்கள்; மோசமான சாதனை படைத்த டெல்லி

டெல்லி 10 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் மிகக்குறைவான ரன்கள்; மோசமான சாதனை படைத்த டெல்லி
Published on

டெல்லி,

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன

இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் சஹில் பிரஹா ரன் எதுவும் எடுக்காமலும் (0), கேஎல் ராகுல் 1 ரன்னிலும், நிதிஷ் ரானா 1 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் எதுவும் எடுக்காமலும் (0), ஸ்டப்ஸ் 5 ரன்னிலும், கேப்டன் அக்சர் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால் பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவில் மிகக்குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி படைத்துள்ளது.

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பவர்பிளேவில் 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோல், 2022ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பவர்பிளேவில் 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இரு அணிகளுமே பவர் பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளாக இருந்தது. ஆனால் தற்போது பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பவர் பிளேயில் 6 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்து பவர் பிளேவில் மிகவும் குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி டெல்லி 10 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com