ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Published on

துபாய்,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (16 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (14 புள்ளி), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

1. தவான், 2. பிரித்வி ஷா, 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. டேனியல் சாம்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ, 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குர்ணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா, 10. டிரென்ட் போல்ட், 11. நாதன் கவுல்டர்-நைல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com