இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 290 ரன்களில் ஆல் அவுட் ஆனது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 290 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 290 ரன்களில் ஆல் அவுட் ஆனது இலங்கை
Published on

காலே,

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் (ரன்ரேட் 4.50) குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 190 ரன்களும் புஜாரா 144 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, பேட்டிங்கை துவக்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து இன்றும் இலங்கை தடுமாறியது. மேத்யூஸ் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியை பாலோ ஆன் ஆவதில் இருந்து காப்பாற்றுவதற்காக பெரேரா கடுமையாக போராடினார். பெராரே ஒருமுனையில் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இலங்கை அணி 78 ஓவர்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. திர்லுவன் பெரேரா 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் முகம்மது ஷமி 2விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அணி பாலோ ஆன் ஆன போதிலும் இலங்கையை பேட் செய்ய பணிக்காமல் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது.

309 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு முதல் டெஸ்டில் பிரகாசமாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com