தோனியின் பேட்டிங் வரிசை சரியா? - ஏபி டி வில்லியர்ஸ் கேள்வி

தோனி இனி 8 , 9-வது இடத்தில் களமிறங்குவது சரியல்ல என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறி இருக்கிறார்.
தோனியின் பேட்டிங் வரிசை சரியா? - ஏபி டி வில்லியர்ஸ் கேள்வி
Published on

புது டெல்லி,

2026 ஐபிஎல் சீசன் விரைவில் துவங்க இருக்கும்நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், எம்.எஸ். தோனியின் பேட்டிங் வரிசை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தோனி இனி 8 , 9-வது இடத்தில் களமிறங்குவது சரியல்ல என்றும், குறைந்தபட்சம் 6-வது இடத்திலாவது பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக கீழ் வரிசையில் பேட்டிங் செய்து வரும் தோனி, அணிக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மேல் வரிசையில் களமிறங்க வேண்டும் என டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Also Read
நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இது தான்...கேஷவ் மகாராஜ்
தோனியின் பேட்டிங் வரிசை சரியா? - ஏபி டி வில்லியர்ஸ் கேள்வி

அவர் கூறுகையில், “சென்னை அணியின் அடையாளமாக தோனி உள்ளார். ஆனால் 8 அல்லது 9-ஆம் இடத்தில் களமிறங்குவது சரியல்ல. அவர் போட்டியின் முக்கிய தருணங்களில் அதிக தாக்கம் செலுத்தும் திறன் கொண்டவர். அதனால் குறைந்தபட்சம் 5 அல்லது 6-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்,” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com