திருமண நாளை கொண்டாடிய தோனி- சாக்சி தம்பதி: வைரலாகும் புகைப்படங்கள்

எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் உள்ளார்.
திருமண நாளை கொண்டாடிய தோனி- சாக்சி தம்பதி: வைரலாகும் புகைப்படங்கள்
Published on

ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை வென்றுள்ளது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், தோனி - சாக்சி தம்பதி நேற்று தங்களது 15வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். திருமண நாளை ஒட்டி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com