'இந்திய அணிக்காக விளையாடுவது கனவு... வாய்ப்புகளை வீணாக்க மாட்டேன்' - துருவ் ஜுரெல்

முதல் டெஸ்ட் போட்டியில் ஜுரெல் 79 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.
 துருவ் ஜுரெல்
Published on: 

கிறைஸ்ட்சர்ச்,

தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்தி அணிக்கு பங்களிக்க விரும்புவதாக துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 368 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 720 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டம் டிரா ஆனது.

நியூசிலாந்து 246/5

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாம் லாதம் 59 ரன்களும், டெவன் கான்வே 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய டாம் பிளண்டல் 53 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணியின் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கனவு

இப்போட்டிக்கு முன்னதாக பேசிய ஜுரெல், , “எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி, அணிக்காக 100 சதவீதம் உழைப்பை கொடுப்பேன். இந்திய அணிக்காக விளையாடுவது எனது நீண்ட நாள் கனவு. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்” என்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜுரெல் சிறப்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் 79 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால், ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்யாமல் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கினார்.

X