டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

சேலம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள் குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரகுமான் 50 ரன்கள் எடுத்தார். சந்திரசேகர், பெரியசாமி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி இறுதியில் 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com