உள்ளூர் கிரிக்கெட்; மராட்டிய அணிக்காக களம் இறங்கும் பிரித்வி ஷா

image courtesy:PTI
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா (வயது 25). இவர் இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றூம் 1 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா (வயது 25). இவர் இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றூம் 1 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். அடுத்த சச்சின் என புகழப்பட்ட இவர் காயம் மற்றும் ஒழுங்கீன பிரச்சனைகளால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், ஒழுங்கீன பிரச்சினையில் சிக்கிய அவர் மும்பை அணியில் இருந்து வெளியேற முடிவு செய்து, தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். தொடர்ந்து மும்பை கிரிகெட் சங்கமும் தடையில்லா சான்றிதழ் வழங்கியது.
இதையடுத்து 25 வயதான பிரித்வி ஷா, மராட்டிய மாநில அணியுடன் இணைந்துள்ளார். 2025-26-ம் ஆண்டு உள்ளூர் சீசனில் அவர் மராட்டிய அணிக்காக ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






