சேஸிங்கில் அதிக ரன்கள்; புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் !

ரன் இலக்கை துரத்தும் போது அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் வீரர் பகார் ஸமான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சேஸிங்கில் அதிக ரன்கள்; புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் !
Published on

சேஸிங் அதாவது ரன் இலக்கை துரத்தும் போது அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் வீரர் பகார் ஸமான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 155 பந்துகளில் 193 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனையை பகார் ஸமான் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற 342 ரன்கள் இமாலய இலக்கை பாகிஸ்தான் துரத்தியது. அபாரமாக ஆடிய பகார் ஸமான் கடைசி ஓவரில் கவனக்குறைவால் தனது விக்கெட்டை ரன் அவுட் மூலம் தாரைவார்த்தார். இதனால், பாகிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம் பிடித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com