இரட்டை சதம்... வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து
Published on: 

ராவல்பிண்டி

இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஹாரி புரூக் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று விளையாடின. ராவல்பிண்டியில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்

இதன்படி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் கேப்டனான ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். அவர் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இரட்டை சதம்

இதனால், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேனும் ஆவார்.

எனினும், 202 ரன்கள் (116 பந்துகள், 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது, ஜனித் பந்து வீச்சில் சஹான் அராச்சிகேவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com