விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்: ராகுல் டிராவிட்

கேப்டவுனில் வலை பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜோகன்னஸ்பர்க்,

இரண்டாவது டெஸ்டில் தோல்வியை தழுவிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் விராட் கோலி பற்றி நிருபர்களிடம் கூறும்போது,

விராட் கோலி முதுகுவலி காயத்தின் காரணமாக 2-வது டெஸ்டில் ஆடவில்லை. தற்போது அவர் காயத்திலிருந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். மைதானத்தில் சிறிது தூரம் ஓடினார். பந்தை எறிந்து பீல்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அடுத்து கேப்டவுனில் வலை பயிற்சியிலும் ஈடுபட இருக்கிறார்.

எனவே 3-வது டெஸ்டுக்குள் அவர் நல்ல உடல்தகுதியுடன் இருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com