

புதுடெல்லி,
19 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டிகள் முறையே செப் டம்பர் 18, 21, 23-ந் தேதிகளில் ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய ஜூனியர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. லக்ஷயா ராய்சந்தானி தலைமையிலான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான டிராவிட்டின் இளைய மகன் அன்வே, முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கின் மகன் ஆர்யவிர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.