துலீப் டிராபி: மத்திய மண்டல அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்

துலீப் டிராபி தொடரில் மத்திய மண்டல அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
துலீப் டிராபி:  மத்திய மண்டல  அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்
Published on

மும்பை,

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் சீசன் துலீப் டிராபி 2026-27 தொடர் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முதல் தர கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் 6 மண்டல அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் மத்திய மண்டல அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியனான மத்திய மண்டல அணியை அவர் மீண்டும் வழிநடத்த உள்ளார்.

இந்த தொடருக்கான அணியில், இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது தலைமைத்துவ திறனை நிரூபித்துள்ள ரஜத் படிதார், தற்போது துலீப் டிராபியிலும் மத்திய மண்டல அணியை வெற்றிப் பாதையில் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com