எமர்ஜிங் ஆசிய கோப்பை; அரையிறுதியில் இந்தியா 'ஏ' - ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோத உள்ளன.
image courtesy: @ACCMedia1
image courtesy: @ACCMedia1
Published on

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு அல் அமேரத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோத உள்ளன.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியை எதிர்கொள்கிறது. அனைத்து அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com