ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி: இங்கிலாந்து கேப்டன் கூறியது என்ன ?

இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி: இங்கிலாந்து கேப்டன் கூறியது என்ன ?
Published on: 

பெர்த்,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. அதிவேக ஆடுகளமான இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 65 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி வில் ஜாக்ஸ் (25 ரன்). அட்கின்சன் (29 ரன்) ஆகியோரின் கணி சமான பங்களிப்பால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் ஹாரி புரூக் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார்.

மஹ்லி பியர்ட்மேன்

ஆஸ்திரேலிய தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான மஹ்லி பியர்ட்மேன் 7.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 24 ரன் மட்டுமே விட்டுக்கொ டுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அறிமுக பவுலர் ஒருவர் 6 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்தத்தில் புதுமுக பவுலரின் 4-வது சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 23.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மிட்செல் மார்ஷ் அரைசதம் (50 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்)) அடித்தார். வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரே லியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் அடிலெய் டில் நாளை நடக்கிறது.

தோல்வி

தோல்வி தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது,

நாங்கள் இங்கு வந்து சுமார் ஒன்றரை வாரம் ஆகிறது. மிகவும் சிறப்பாகப் பயிற்சி செய்து போட்டிக்குத் தயாராகியிருந்தோம். ஆஸ்திரேலிய வீரர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். குறிப்பாக மஹ்லி பேர்ட்மேன் இன்று அபாரமாகச் செயல்பட்டார்.

அவர் சரியான இடங்களில் பந்துகளை வீசினார். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்தி எங்களுடைய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

வெவ்வேறு ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருந்தோம்.

வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடுவதற்கு ஏற்றவாறு நமது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.இந்த ஆடுகளத்தில் சில வகையான ஷாட்களை விளையாடுவது சரியாக இருக்காது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். சுமார் 30 ஓவர்களுக்கும் மேலாக சரியான இடங்களில் தொடர்ந்து பந்துவீசினார்கள்.

அதற்கேற்ற வகையில் எங்களுடைய பேட்டிங் திறமையைச் சரியாக வெளிப்படுத்தத் தவறிவிட்டோம்.என தெரிவித்தார்.

X