

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் விவரம்:-
* ஜேக்கப் பெதெல்
* பென் டக்கெட்
* ஜோ ரூட்
* ஹாரி புரூக் (கேப்டன்)
* ஜோஸ் பட்லர்
* சாம் கரன்
* வில் ஜாக்ஸ்
* ஜோப்ரா ஆர்ச்சர்
* லியம் டாசன்
* ஜோஷ் டங்
* அடில் ரஷீத்