காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் விலகல்

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் விலகல்
Published on

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்ட அவர் பேட்டிங்கில் பாதியிலேயே வெளியேறினார்.

ஸ்கேன் பரிசோதனையில், பின்னங்கால் தசையில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் உலக கோப்பை தொடரில், எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் நேற்று விலகினார். அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் பட்டியலில் இருந்த ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

நாளை நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லருடன் ஜானி பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com