முதல் டி20 - அரைசதம் விளாசிய ஹாரி புரூக்... ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன்கள் இலக்கு

ஹாரி புரூக்கின் அதிரடிக்குப் பிறகு டாம் பேண்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஹாரி புரூக்
Published on: 

மெல்போர்ன்,

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

முதல் ஆட்டம்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் அன்யூரின் டொனால்ட் களமிறங்கினர்.

ஆனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தார். ஜோயல் டேவிஸ் வீசிய முதல் பந்தை அடிக்க முயன்ற சால்ட், மிட்செல் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அன்யூரின் டொனால்டும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

20 பந்துகளில் அரைசதம்

தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை கேப்டன் ஹாரி புரூக் தனது அதிரடி ஆட்டத்தால் மீட்டார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த அவர், வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய புரூக் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் குவித்தார்.

பின்னர் நிகில் சௌத்ரி பந்துவீச்சில் சாம் ஹார்ப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கைகொடுத்த வீரர்கள்

ஹாரி புரூக்கின் அதிரடிக்குப் பிறகு டாம் பேண்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். ஜோர்டான் காக்ஸ் 20 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். சாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதனால் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X