

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற உள்ளதால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. டி20 தொடரை இந்தியா இழந்த நிலையில் ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றிபெற வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.