

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பெத்தல் 14 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் 43 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து 18 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறி வருகிறது.
சிறப்பாக பந்து வீசி வரும் இந்திய வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், வில் ஜாக்ஸ் களத்தில் உள்ளனர்.