

நாட்டிங்கம்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது டி20 போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. நாட்டிங்கம்மில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர்.