

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டேனி வயட் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து 220 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை கெம்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.