

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளநிலையில், இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
463 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. பொறுப்புடம் விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 75 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 165-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய அவர், டெஸ்ட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார்.