14,000 ரன்கள்... டெஸ்ட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
14,000 ரன்கள்... டெஸ்ட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஜோ ரூட்
Published on

லண்டன்,

டெஸ்ட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

2-வது டெஸ்ட்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளநிலையில், இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

ஜோ ரூட் போராட்டம்

463 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. பொறுப்புடம் விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 75 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

14 ஆயிரம் ரன்கள்

இந்த போட்டியில் ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 165-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய அவர், டெஸ்ட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முதலிடத்தில் சச்சின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com