யார் இந்த ஜேசன் ரோவ்ல்ஸ்? - எஸ்ஏ20 ஏலத்தில் அதிக விலைக்கு போன இளம் வீரர்

எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரின் 5-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது.
ஜேசன் ரோவ்ல்ஸ்
Published on: 

ஜோகன்னஸ்பர்க்,

எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஜேசன் ரோவ்ல்ஸை ரூ.1.68 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடிப்படை விலையைவிட பல மடங்கு அதிகம்!

தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரின் 5-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் 18 வயது இளம் வீரர் ஜேசன் ரோவ்ல்ஸை வாங்குவதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த ஏலத்தில் ஜேசன் ரோவ்ல்ஸின் அடிப்படை விலை தென் ஆனாப்பிரிக்க ராண்டில் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.11.5 லட்சமாகும்.

அவரை அணியில் சேர்க்க ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஜேசன் ரோவ்ல்ஸை ரூ.1.68 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இதன் மூலம், இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் உருவெடுத்தார்.

18 வயதில் கிடைத்த பெரிய வாய்ப்பு!

18 வயதான ஜேசன் ரோவ்ல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் இடதுகை பேட்ஸ்மேனாகவும், இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் விளையாடியுள்ளார்.

அனுபவ வீரர்களுடன் இணையும் வாய்ப்பு!

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இளம் வயதிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜேசன் ரோவ்ல்ஸுக்கு, அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது தனது திறமையை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com