இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு: ஜிம்பாப்வே கேப்டன்

இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு:  ஜிம்பாப்வே கேப்டன்
Published on

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறியதாவது,

இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஜிம்பாப்வே அணி கடந்த சில போட்டிகளில் மிகவும் சீரான மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. எனவே, இந்தத் தொடர் நிச்சயமாக மிகவும் விறுவிறுப்பாகவும், ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும் என்று உறுதியாக சொல்ல முடியும்.என தெரிவித்தார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com