இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அது என் இழப்பல்ல! – முகமது ஷமி அதிரடி

சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அது என் இழப்பல்ல! – முகமது ஷமி அதிரடி
Published on: 

புதுடெல்லி,

இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பெங்கால் அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது. நான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். பெங்கால் அணிக்காக விளையாடுவதன் மூலம் எனது உடற்தகுதியையும் நிரூபித்துள்ளேன். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அது எனது இழப்பல்ல.என தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பிடித்தது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவருக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என ஷமி தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அது அவருக்கு நல்ல விஷயம். ஆனால், அவருடைய தேர்வு என்னைப் பொறுத்தவரை கவலையளிக்கும் விஷயமல்ல. எனக்கு எங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். தற்போது பெங்கால் அணிக்காக நடைபெறவுள்ள ரஞ்சி போட்டியில்தான் எனது முழுக் கவனமும் உள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com