

மும்பை,
தஙக்ம் வென்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை வி.வி.எஸ். லட்சுமண் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் ஐச்சி–நகோயாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்ப்போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 211/6 என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது. தொடர்ந்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் வி.வி.எஸ். லட்சுமண் கூறியதாவது:
“தொடர்ந்து தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்தது மிகவும் சிறப்பானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தங்கம் வென்றோம். தற்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளோம்.
உலகக்கோப்பையை வென்ற பல வீரர்கள் அணியில் இருந்தாலும், அவர்களில் பலருக்கு இதுதான் முதல் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம். இது அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம்.”
இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.