சிஎஸ்கே அணியில் தக்கவைப்பு: ஜடேஜா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு- ரசிகர்கள் உற்சாகம்

சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Image Courtesy: PTI/ Twitter imjadeja
Image Courtesy: PTI/ Twitter imjadeja
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்துள்ளதால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்து உள்ளது.

சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார். அதே நேரத்தில் அந்த அணி அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. தற்போது சென்னை அணியின் கைவசம் ரூ. 20.45 கோடி உள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியை வணங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜடேஜா, "எல்லாம் நன்றாக இருக்கிறது, மீண்டும் தொடங்கலாம்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com