சஹால் 4-வது ஓவர் வீசாதது ஏன்? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் ஏன் சஹாலின் 4வது ஓவரை பயன்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
சஹால் 4-வது ஓவர் வீசாதது ஏன்? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி
Published on

மும்பை,

இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, பஞ்சாப் அணியின் முன்னணி ஸ்பின்னர் சஹால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஏன் 4-வது ஓவரை வீசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 209 ரன்களை அடித்தது. இதில் பஞ்சாப் அணியின் முன்னணி ஸ்பின்னர் சாஹல் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். 21 ரன்கள் விட்டுக் கொடுத்து, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை கைப்பற்றினார்.

Also Read
“ரோகித் - கோலி எதிர்காலம்… உடனே முடிவு எடுக்கணும்“ - யுவராஜ் சிங் அழுத்தம்
சஹால் 4-வது ஓவர் வீசாதது ஏன்? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

இந்த நிலையில், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் ஏன் சஹாலின் 4வது ஓவரை பயன்படுத்தவில்லை என சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரு பவுண்டரியும் கொடுக்காத பந்துவீச்சாளர் தனது முழு ஓவரையும் முடிக்காதது ஏன்?” என்று சோப்ரா கேள்வி எழுப்பினார். சிவம் துபே கிரீஸில் இருந்தது காரணமாக இருக்கலாம் என்றாலும், ஜடேஜா துபேவை முன்பு அவுட் செய்ததை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த முடிவு போட்டியின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. 210 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் மற்றும் 8 பந்துகள் மீதமிருக்கும்போதே எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம், சிஎஸ்கே அணி 10வது இடத்திற்கு சரிந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com