“ரோகித் - கோலி எதிர்காலம்… உடனே முடிவு எடுக்கணும்“ - யுவராஜ் சிங் அழுத்தம்

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அனுபவம் முக்கியம் என்று யுவராஜ் வலியுறுத்தினார்.
“ரோகித் - கோலி எதிர்காலம்… உடனே முடிவு எடுக்கணும்“ -  யுவராஜ் சிங் அழுத்தம்
Published on

புதுடெல்லி,

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை முன்னிட்டு, மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) மற்றும் அணி நிர்வாகம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள், இருவர்களுடனும் நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய கிரிக்கெட்டில் வீரர்களிடம் உண்மையை நேரடியாக சொல்லும் நடைமுறை இல்லாதது மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Also Read
பந்துவீச்சு மாற்றத்திற்கு பின்னால் ‘மறைமுக நபர்’ - பெயர் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்த நிதிஷ்குமார்
“ரோகித் - கோலி எதிர்காலம்… உடனே முடிவு எடுக்கணும்“ -  யுவராஜ் சிங் அழுத்தம்

அணியின் எதிர்காலம் இளம் வீரர்களை நோக்கி நகர வேண்டுமென நிர்வாகம் முடிவு செய்தால், அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் அப்படி தெரிவித்தால் வீரர்கள் மரியாதையுடன் விலக தயாராக இருப்பார்கள் எனவும் யுவராஜ் கூறினார். இந்த பேச்சுவார்த்தை தற்போதைய ஐபிஎல் தொடருக்கு பின்னர் உடனடியாக நடைபெற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

விராட் கோலி தற்போது சிறந்த பார்மில் உள்ளார் என்றும், ஐசிசி தரவரிசையில் மீண்டும் முன்னிலை பிடித்திருப்பது அவரது திறமையை நிரூபிப்பதாகவும் யுவராஜ் தெரிவித்தார். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் போன்றோர் தயாராக இருந்தாலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அனுபவம் முக்கியம் என்றும் யுவராஜ் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com